கண்&இமைமேக்கப்

முகத்திற்கு ஏற்ற புருவங்கள்

Eyebrows suitable for the face

கண்களுக்கு அழகு தருவதில் முக்கிய பங்கு வகிப்பது புருவங்கள். புருவத்தின் அள வைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும். வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத் தமாக இருக்காது. முகத்திற்கு தக்க படி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியி ன் அளவு ஆகியவற்றிற்கு தக்க படி, புருவத்தை அமைக்க வேண்டும்.

முகத்திற்கே பல வடிவம் இருக்கிறது. சதுர முகம், நீண்ட முகம், முக்கோண முகம், வட்டமுகம் போன்றவை குறிப் பிடத்தக்கவை. இந்த முக அமைப்புக்கு பொருத்தமானதாக, புருவம் இருக்க வேண்டும். சதுரமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, லே சாக ஒரு கோடு போல புருவ அமைப்பு இருந்தால், அது அழகாக இருக்காது. புருவம் பெரிதாக அழுத்தமாக இருந்தா ல் அழகு அதிகரிக்கும். புருவ முடிகளின் வரிசையில் உள் பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற் ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.

நீள்வட்ட முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, இவர் கள் புருவம் லேசாக மேலேற வெளிப்புறம் கொ ஞ்ச மாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும். வெளிப்பு றமாக இருக்கும் தேவையற்ற முடி யை அகற்றி விடுங்கள். முடியுமிட த்தில் மிகவும் மெலிதாக இருக்கட் டும்.

வட்ட முக அமைப்பு கொண்ட பெண் களுக்கு புருவம் மிகவும் நீளம் குறைந்ததாய் இருக்க வேண்டும். பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்து க் குறுகிக் கொண்டே இருக்க வேண் டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடுங்கள். நீளமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, எவ்வளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத் தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.

Source
image
Back to top button