பாதம்மேக்கப்

பாதங்களை பராமரிக்கும் 7 குறிப்புகள்

7 Tips for Maintaining Feet

பாதங்களை பாராமரிப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் பாராமரிப்பு என்பது முக்கியமானதாகும். அதேபோல் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் அழுகுக்கு உரியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் அதை செய்வதில்லை. பாதம் என்று வந்து விட்டால் பராமரிப்பு என்பதை மறந்தே விடுகின்றனர். பாதம் என்பது அழகின் வேறு பெயர் என்பதாகும். சரி பாத பராமரிப்பில் முக்கிய 7 குறிப்புகள் குறித்து இப்போது பார்ப்போம்.

1. தினமும் வெளியில் சென்று வந்தவுடன் பாதங்களை ஒழுங்காக சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யும் போது தரமான கிருமிநாசினி சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

2. ஒரு பங்கு வினிகருடன் இரண்டு பங்கு நீரைச் சேர்த்து நன்றாக சுத்தம் செய்வதன் மூலம் பாதங்களில் ஏற்படும் பாக்டீரியா பாதிப்புகளை பெருமளவில் குறைக்கலாம்.

3. எப்பொழுதும் அசுத்தமான,வியர்வை மிகுந்த காலுறைகளைத் தவிர்த்து விடுங்கள்.

4. பாதங்களை பராமரிப்பதற்காக சரியான சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உங்கள் டயட் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கம் போன்றவற்றை குறைப்பதன் மூலம் உங்கள் பாதங்கள் எளிதில் சோர்வடையாமல் தவிர்க்கலாம்.

6. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பவுடர்கள்,ஸ்பேரேக்கள் போன்றவற்றை சரியாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

7. பாதங்களிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை போக்குவதற்கென்றே உள்ள மூலிகைகளைப் பயன்படுத்துங்கள்.

Source
image
Back to top button