மென் மேக்கப்

தலையில் வட்ட வட்டமாக முடி உதிர்ந்தால் டீ ட்ரீ எண்ணெய்

Hair Problem - Tea tree oil

இப்படி உங்கள் தலையில் வட்ட வட்டமாக முடி உதிர்ந்து அது அசிங்கமா இருக்கின்றதா ? இது சொட்டை என்று நினைத்துவிட வேண்டாம். இதற்கு படர்தாமரை என்று கூறப்படுகின்றது. படை அல்லது படர்தாமரை என்பது ஒரு வகையான பூஞ்சை தொற்று ஆகும். உடலின் உடலின் எந்த பகுதியிலும் கை, கால், பாதம், உச்சந்தலை என்று எந்த இடத்திலும் இந்த வகையான பூஞ்சை தொற்று ஏற்படக்கூடும். இது ஒருவகையில் அரிப்பை உருவாக்கக்கூடிய வட்டவடிவத்தில் தோன்றக்கூடிய பாதிப்பாகும்.

படர்தாமரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பலவகையான பூஞ்சை உள்ளன. இவற்றுள் மிகப் பொதுவானவை ட்ரைக்கோபைதான் மற்றும் மைக்ரோஸ்போரம் போன்றவையாகும். அரிப்புடன் கூடிய தடிப்புகள், கொப்பளங்கள் அல்லது செதில் செதிலாக உதிரும் தோல் போன்றவை இந்த படர்தாமரையால் உண்டாகும் பாதிப்புகளாகும். டீனியா காபிடிடிஸ் என்பது உச்சந்தலையில் படர்தாமரை உருவாக்கும் தொற்று பாதிப்பாகும்.

இதனால் முடி உடையலாம், பிள்வு ஏற்படலாம் அல்லது பகுதி முறையில் வழுக்கை பாதிப்பும் உண்டாகலாம். பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவது பொதுவானது . மொத்த ஜனத்தொகையில் 10 முதல் 20 சதவிகிதம் பேர் தங்கள் ஆயுட்காலத்தில் ஒருமுறையாவது இந்த பாதிப்பை பெறுகின்றனர்.

உச்சந்தலையில் படர்தாமரை ஏற்படுவதற்கு என்ன காரணங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். டெர்மடோபைட் என்னும் பூஞ்சையின் காரணமாக இந்த படர்தாமரை உண்டாகிறது. பெரும்பாலும் மனிதர்களின் உச்சந்தலையில் ட்ரைக்கோபைதான் மற்றும் மைக்ரோஸ்போரம் போன்ற பூஞ்சைகள் பாதிப்பை உண்டாக்குகின்றன என்று கூறப்படுகின்றது. மேலும் அதிக உடல் உஷ்ணத்தினாலும் வரக்கூடியது என்றும் கூறப்படுகின்றது.

சரி இதற்கு என்னதான் தீர்வு என்று கேட்பவர்கள் முதலில் இதற்கு என மருத்துவமனைக்குச் செல்வதை நிறுத்துங்கள். ஆங்கில மருந்துகளால் பயன் ஒன்றும் இல்லை. இயற்கை முறையிலும் நமது தொடர் கவனிப்பிலும் இதனை சரி செய்யலாம். ஆண்கள் பலருக்கும் இந்த பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சரி இப்பொழுது இதற்கான இயற்கை வைத்தியம் என்னவென்று பார்ப்போம்.

டீ ட்ரீ எண்ணெய்

தேயிலை மற்றும் அதன் தண்டு பகுதியில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் சருமப் பராமரிப்பிற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும் பொருள்களில் முக்கியபங்கு வகிக்கிறது. இது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து தெளிவான நிறம் வரையிலும் காணப்படுகின்றது. தென்கிழக்கு குயின்லாந்து, மற்றும் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் வடகிழக்கு கடற்கரையில காணப்படும் மெலலூகா ஆல்டர்ன்போலியா எனும் தேயிலை மரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது.

இது சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஊட்டமளிக்கும் வகையில் ஆன்டி இன்ஃப்ளமெட்ரி, ஆன்டி ஃப்ங்கல், ஆன்டி செப்டிக், ஆன்டி பாக்டீரியல் கொண்டிருக்கிறது தேயிலை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய். சற்று விலை அதிகமுள்ள இதை தனியாக பயன்படுத்த வேண்டியதில்லை என்பது ஆறுதல் அளிக்ககூடிய விஷயம்.

இந்த அற்புதமான நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த டீ ட்ரீ எண்ணெய் உச்சந்தலையில் உள்ள பூஞ்சைத் தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது என்று பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. அழற்சி மற்றும் அரிப்பிலிருந்து உடனடி நிவாரணம் பெறவும் டீ ட்ரீ எண்ணெய் உதவுகிறது

டீ ட்ரீ எண்ணெய்யை நீர்க்கச் செய்து மூன்று முதல் நான்கு துளிகள் எடுத்துக்கொண்டு அதனை ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும். இந்த எண்ணெய் கலவையில் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். அரைமணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்பு தலைமுடியை அலசவும். தினமும் ஒரு முறை இதனை செய்யலாம். அல்லது உங்கள் ஷாம்புவில் சில துளிகள் டீ ட்ரீ எண்ணெய் கலந்து கொள்ளலாம். ஒரு வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை உங்கள் தலையை இந்த எண்ணெய் கொண்டு அலசலாம்.

​பூண்டு விழுது

அஜோய்ன், அல்லிசின் போன்ற பல்வேறு பூஞ்சை எதிர்ப்பு கூறுகள் கொண்ட ஒரு பொருள் பூண்டு. இந்த கூறுகள் பூஞ்சைத் தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது. பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஒருபுறமிருந்தாலும் பூண்டு, அழற்சி மற்றும் அரிப்பிலிருந்து விரைந்து நிவாரணம் பெற உதவுகிறது.

4 முதல் 5 பூண்டு பற்களை ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் ஊற விடவும். பின்பு தலையை அலசவும். வாரத்தில் இரண்டு முறை இதனை பின்பற்றலாம். மேலும் உங்கள் உணவில் பூண்டை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சள்

அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு கூறுகள் கொண்ட குர்குமின் , மஞ்சளில் அதிகம் உள்ளது. வீட்டு மருத்துவத்தில் பல்வேறு வகையாக பயன்படுத்தப்படும் மஞ்சள் தொற்று பாதிப்பை எதிர்த்துப் போராடி வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்பு அளவை அதிகரிக்கும் தன்மை மஞ்சளில் உள்ளது.

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் அளவு மஞ்சள் சேர்த்து ஒரு விழுதாக தயாரிக்கவும். இந்த விழுதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். 1-2 மணி நேரம் ஊறியபின் தலையை அலசவும். தொற்று பாதிப்பு நீங்கும் வரை இதனை முயற்சிக்கவும். அல்லது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தினமும் பருகலாம்.

கற்றாழை

அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-செப்டிக் போன்ற தன்மைகள் கொண்ட கற்றாழை சருமத்திற்கு இதமான உணர்வை தருகிறது. கற்றாழை அதன் பூஞ்சை எதிர்ப்பு தன்மை காரணமாக உச்சந்தலையில் உண்டாகும் படர்தாமரையை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் அதனுடன் கூடிய அரிப்பு , அழற்சி மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது.

அரை மூடி எலுமிச்சை சாறுடன் அரை கப் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும். இதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். அரை மணி நேரம் இதனை ஊறவிடவும். பின்பு வெதுவெதுப்பான நீர் கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பின்பற்றவும்.

சின்ன வெங்காயம்

பலருக்கும் சின்ன வெங்காயம் அரைத்து தேய்த்து பலன் கிடைத்திருப்பதாக கூறுகின்றனர். எனினும் படர்தாமரை அதிகமுள்ளவர்களுக்கு இது ஓரளவு மட்டுமே பலன் கொடுக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து, அரை மணி நேரத்திற்குப் பிறகு அலச வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள இயற்கை பொருட்களைக் கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும். முக்கியமாக டீ ட்ரீ எண்ணெய் எண்ணெய் ஐ பயன்படுத்துங்கள். அதேபோல் நிதமும் நிம்மதியான குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறக்கம் வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Back to top button