பாதம்மேக்கப்

தட்டையான பாதத்திற்கு ஏற்ற காலணிகள்

Shoes suitable for flat feet

அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அவர்களின் பாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாதங்களின் வடிவங்களுக் கேற்ப காலணிகள் அணிய வேண்டும். சிலருக்கு தட்டை பாதம் அதாவது சப்பை கால் ஆங்கிலத்தில் Flat Feet என்பார்கள்.

தட்டைப் பாதம் என்றால் முன்பாதத்துக்கும் குதிகாலுக்கும் உள்ள இடைப்பட்ட பகுதி ‘ஆர்ச்’ (Arch) என்பார்கள் இது போன்ற இடைவெளி இல்லாமல் தட்டையாக இருப்பதைத்தான் தட்டை பாதம் (Flat Feet) என்கிறோம்.

தட்டைப் பாதம் என்பார்கள். இது பெரும்பாலும், பிறப்பின்போதே ஏற்பட்டு விடுகிறது. அதனால் தட்டை பாதங்களுக்கு ஏற்றாற்போல் ஷூ செய்து அணியாவிட்டால், இந்த ஆர்ச் பகுதியிலும் குதிகாலிலும் அதீத வலி ஏற்பட்டு, பின்னாளி அது அவர்கள் நடையில் மாற்றங்கள் உண்டாகி, கால், மூட்டு, இடுப்பு, முதுகு, போன்ற பகுதிகளில் அதீத வலியை உண்டாக்குவதோடு சில பல நோய்களுக்கும் அவர்களை ஆட்படுத் தும் என்கிறது மருத்துவ உலகம்.

ஆகவே தான், நாம் காலணிகளை வாங்கும்போது அழகையும் ஆடம்பரத்தையும் பார்த்து வாங்காமல் நமது பாதங்களின் வடிவங்களுக்கேற்ப பார்த்து வாங்கினால் என்றெ ன்றும் பாதங்கள் பாதுகாக்கப்படும். பாதங்கள் பாதுகாக்கப்படுவதால் உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Source
image
Back to top button