கண்&இமைமேக்கப்

கண்கள் அழகை கெடுக்கும் தொங்கும் சதைப் பை

spoils the beauty of the eyes

உங்களுக்கு வய்தாவதை முதலில் உணர்த்துவது கண்கள்தான். கண் சரும தொய்வடைந்து, கண்களுக்கு அடியில் குழி விழும். பின் சதைப் பை உருவாகி வயதான தோற்றத்தை தந்துவிடும். என்னதான் முகம் இளமையுடன் இருந்தாலும் கண்களுக்கு அடியில் சதைப் பை இருந்தால் உங்களுக்கு வயசாச்சு என்று கூறிவிடுவார்கள்.

அதிகம் உப்பு உணவில் சேர்த்தால் அதிக மன அழுத்தம் போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் சம நிலையற்ற தன்மை ஆகியவை கண்களில் சதைப்பை உருவாக காரணம். இங்கே சொல்லப்பட்டிருக்கும் மிக எளிமையான குறிப்புகளை பயன்படுத்துங்கள். ஆரம்பத்திலேயே இதனை கவனித்தால் எளிதில் கண்கள் முதுமையடைவதை தவிர்த்துவிடலாம்.

ஸ்பூன் மசாஜ்

இது விரைவில் பலனளிக்கக் கூடியது. ஒரு எவர் சில்வர் ஸ்பூனை எடுத்து 15 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும். பின்னர் இதனை எடுத்து குழிவான வளைந்த பகுதியினால் கண்களில் ஒத்தடம் தரவும். வெதுவெதுப்பாக ஸ்பூன் மாறியதும் திரும்பவும் ஃப்ரீஸரில் வைத்து உபயோகிக்க வேண்டும். கண்களில் அதிக ரத்தம் பாய இந்த குறிப்பு உதவும்.

உருளைக் கிழங்கு சாறு

உருளைக் கிழங்கில் புதிதாக சாறு எடுத்து அதனை சில நிமிடங்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்படுத்துங்கள். பின் அதனை ஒரு பஞ்சினால் நனைத்து கண்களைச் சுற்றிலும் த்டவவும். காய்ந்ததும் கழுவுங்கள். கண்களுக்கு அடியில் குறைந்திருக்கும் கொல்ஜானை அதிகரிக்கச் செய்யும்.

காய்ச்சாத பால்

காய்ச்சாத பாலை பஞ்சினால் நனைத்து கண்கள் மீது வைக்கவும் 10 நிமிடங்கள் கழித்து பஞ்சை அகற்றிவிடுங்கள். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் கண்களுக்கு புத்துணர்ச்சி தரும்.

ரோஸ் வாட்டர் ஐஸ் கட்டி

ரோஸ் வாட்டரை ஐஸ் ட்ரே யில் ஊற்றி ஃப்ரீஸரில் வைத்துவிடவும். இது கட்டியாக மாறிய பின் இந்த கட்டியால் கண்களின் மேல் ஒத்தடம் தர வேண்டும். விரைவில் பலன் தரக் கூடியது. கண்கள் ஒளிரும். தூக்கம், மற்றும் மன அழுத்த பிரச்சனையால் பொலிவின்றி தொங்கிய கண்களுக்கு மீண்டும் உயிர் தரும் குறிப்பு இது.

க்ரீன் டீ பேக்

தேயிலை பைகள் இரண்டு எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஃப்ரீஸரில் 15 நிமிடங்கள் வைத்தபின் வெளியில் எடுத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து எடுத்து விடவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்தால் கண்கள் மிகவும் பொலிவாக இருக்கும். கண்களுக்கு அடியில் உண்டாகும் சதை மறைந்துவிடும்.

Back to top button