கண்&இமைமேக்கப்

அழகிய கண்களுக்கு அருமையான டிப்ஸ்

Health tips for beautiful eyes

தினமும் இரவில் படுக்கும் முன் 2 துளிகள் விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும். கண்கள் நன்கு பளிச்சென்று தெரிவதற்கு, வாரத்திற்கு ஒரு முறை 2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெயை கண்களில் விட வேண்டும்.

சிறிது பாதாமை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி வர, கண்களைச் சுற்றியுள்ள அசிங்கமான கருவளையங்கள் நீங்கும். தினமும் கண் பயிற்சிகளை செய்து வருவதன் மூலம், கண் பார்வை மேம்படும்.

தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மீது வைத்து 10 நிமிடம் அமர, கண்களில் உள்ள சோர்வு மற்றும் கருவளையங்கள் நீங்கும். உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி கண்களின் மீது வைத்தாலும், கருவளையங்கள் நீங்கும். தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, கண்களை சுற்றி தேய்த்தால் கருவளையம் மறையும்.

நேந்திரம் பழத்தை கூழாக்கி அதை கண்களை சுற்றி பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கும். கஸ்தூரி மஞ்சள், ரத்த சந்தனம் ஆகியவற்றை சம அளவில் கலந்து தினமும் பூசி வந்தால் கண்களின் கீழே உள்ள கறுப்பு வளையம் மாறும்.

Source
image
Back to top button