கண்&இமைமேக்கப்

அழகான புருவங்களுக்கு அவசியம் செய்ய வேண்டியவைகள்

Things to do for beautiful eyebrows

சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு புருவ ரோமங்களின் நிறம் வேறு மாதிரியாக இருக்கும். ஒரு சிலருக்குப் புருவங்களில் புழுவெட்டு ஏற்பட்டு, ஒரு சில இடங்களில் முடி உதிர்ந்து போயிருக்கும். புருவங்களில் பேன்கள் கூட சிலருக்கு வரலாம். இவையெல்லாம் புருவங்களை சுத்தமாகப் பராமரிக்காததால் ஏற்படும் விளைவுகள்.

அழகான புருவங்களைப் பெற விரும்புவோருக்கு…பொதுவான ஆலோசனைகள் தினம் ஒரு முறையாவது புருவங்களை மசாஜ் செய்து விட வேண்டும்.கண்களுக்கான மசாஜ் செய்யும்போது புருவங்களில் ரோம வளர்ச்சி அதிகரிக்கும்.சிலருக்குத் திடீரென ஒரு புருவத்தில் அதிக முடி இருக்கும். இன்னொன்றில் குறைவாக இருக்கும்.

அவர்களுக்குக் கண் பார்வைக் கோளாறுகள் இருக்கக் கூடும். எனவே அவர்கள் முதலில் அதற்கு சிகிச்சை மேற் கொள்ள வேண்டும். புருவங்கள் நரைத்திருந்தால் அவற்றை மறைக்க ஒரு போதும் ஹேர் டையை உபயோகிக்கக் கூடாது. ஹேர் டையில் உள்ள வேதிப்பொருள் கலவையால் புற்று நோய் வரக் கூட வாய்ப்புகள் உண்டு.புருவங்களில் உள்ள அதிகப்படியான முடிகளை அகற்ற ஹேர் ரிமூவிங் கிரீம் உபயோகிக்கக் கூடாது.

சிலர் அடிக்கடி கண்களை குறுக்கியும், புருவங்களை வளைத்து, உயர்த்தியும் பேசுவார்கள். தொடர்ந்து இப்படியே செய்து வந்தால் புருவங்களின் ஷேப் மாறக்கூடும். புருவங்களை ரொம்பவும் கீழ் நோக்கி வளைத்து ஷேப் செய்யக் கூடாது. லேசாக மேல் நோக்கி வளைந்திருக்கும் படி செய்தால் இளமையான தோற்றம் கிடைக்கும்.நீளமான முகத்திற்கு புருவங்களை கண்களுக்கு சற்று வெளியே இருக்கும்படி பார்த்து ஷேப் செய்ய வேண்டும். சாதாரண முகத்திற்கு சாதாரண அளவில் ஷேப் செய்யலாம்.

சிறிய முகத்திற்கு புருவங்கள் ரொம்பவும் நீளமாக இருக்க வேண்டாம். இயற்கை முறை ஆலோசனைகள் புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் என்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.

எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விட வேண்டும். எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது.தினசரி குளிப்பதற்கு முன்பாகப் புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம். இதுவும் புருவங்கள் அழகாக உதவும்.

புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் கூடும்.பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் சிலரது பழக்கம். அவசரத்திற்கு அவர்கள் அப்படிச் செய்வதுண்டு. இந்த முறை மிகமிக ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது ரொம்பவும் திக்காக கன்னாபின்னாவென வளரும்.புருவங்கள் நரைத்திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம்.

மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காய வைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது அழகாக, இயற்கையாக இருக்கும்.கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம். கண்கள் குளிர்ச்சியாவதுடன், புருவங்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவும்.புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, யிலாங் யிலாங் மாதிரியான அரோமா எண்ணெய்கள்மிகச் சிறந்தவை. அவற்றை சூடு படுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்கலாம்.

Source
image
Back to top button