பாதம்மேக்கப்

அழகான பாதங்களுக்கு தினமும் செய்யுஙகள் இதை

Do this daily for beautiful feet

அழகான பாதத்தை வைத்திருப்பதில் யாருக்குத் தான் ஆசை இல்லை. ஆனால் பலரும் பாதவெடிப்பு, உலர்வடைதல், தொற்றுக்கள் ஏற்படுதல் போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அழகிய மிருதுவான பாதத்தைப் பெறுவதற்கு முகத்திற்கும், கைகளிற்கும் கொடுக்கும் அதே அளவு அக்கறை பாதத்திற்கு செலுத்துவதும் அவசியமானது.

கடைகளில் கிடைக்கும் சில கிறீம் வகைகளை வாங்கி பாதத்திற்கு பயன்படுத்தினாலும் அதற்கான தீர்வைப் பெறுவதற்கு அதிக நேரமும், பணமும் விரயமாகிறது. பார்லருக்குச் சென்று பாதத்திற்குரிய சிகிச்சைப் பெற்றுக் கொண்டாலும் அதனால் நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. ஆனால் தொடர்ச்சியான பராமரிப்பைச் செய்து வந்தால் மிருதுவான பாதத்தை எப்போதும் பேண முடியும்.

உங்கள் பாதத்தை அழகாகப் பேணுவதற்கான சில குறிப்புக்களை இங்கே பகிரவுள்ளோம். இதனால் பக்டீரியா, பங்கஸ் தொற்றுக்களிடம் இருந்தும் தீர்வைப் பெற்றுத் தருவதுடன் பாதத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பேண முடியும்.

பாதம் ஈரப்பதமாக இருப்பது மிகவும் அவசியமானது. ஏனெனில் நமது பாதத்திற்கு அதிகப்படியான வேலைகள் இருப்பதனால், குறிப்பாக தொடர்ச்சியாக பயணம் செய்யும் வேலைகளைச் செய்பவர்களிற்கு அதிகளவிலான பாதிப்புக்கள் ஏற்படுவதனால் மொய்ஸ்டரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

பாதணிகளை சரியான அளவில் அணியாத போது கால்களை வெட்டுதல், உராய்வுக் காயங்கள் போன்றன ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதனால் சரியான அளவிலான பாதணிகளை அணிவது அவசியமானது.

வெளியே செல்லும் போது சூரிய ஒளியில் உள்ள UV கதிர்களின் பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பதற்காக சன் கிறீம் பயன்படுத்துவது அவசியமானது. அதனால் இரவில் சூடான நீரில் காலை ஊற வைத்துக் கழுவுவதும் சிறப்பானது.

நகப்பூச்சுக்களைப் பூசும் போது பழைய நகப்பூச்சுக்களை முற்றாக நீக்கி விட்டு, சிறிது நேரத்தின் பின் புதிய நகப்பூச்சுக்களைப் போடுவதனால் தான் நகத்தின் வலிமையைப் பெற முடியும்.

ஸ்கிறப்பை பயன்படுத்துவதனால் பாதத்தில் உள்ள இறந்த கலங்களை நீக்கி மென்மையாக மாற்றும். வீட்டிலேயே சீனி, உப்பு, பேபி எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கும் ஸ்கிறப்பை பாதத்திற்கு மசாஜ் செய்து, பின் கற்களினால் தேய்த்து கழுவவும்.

பாத விரல்களில் உள்ள நகங்களை வெட்டுவது மிகவும் அவசியமானது. இல்லையெனில் அதனால் நடப்பது கடினத் தன்மை ஏற்படும். தினமும் 5 நிமிடங்களாவது நேரத்தை செலவு செய்து பாதங்களை மசாஜ் செய்வதனால் பாதத்தை ஆரோக்கியமாகப் பேண முடியும்.

Source
image
Back to top button