கை&கால்நகங்கள்மேக்கப்

அழகான கால் நகங்களுக்கு இது அவசியம்

This is essential for beautiful toenails

பெண்களின் கால்களுக்கு அழகு சேர்ப்பது கால்விரல்கள்தான். அந்தகால் விரல்களுக்கு அழகுசேர்ப்பது நகங்கள் தானே. அந்த நகங்கள், மஞ்சள் கறை படிந்து அசிங்க மாக இருந்தாலும், உங்கள் கால்களின் அழகை ஒட்டுமொத்தமாக சிதைத்து விடும். ஆகவே இதனை போக்க ஒரு எளிய வீட்டுக் குறிப்பு பார்ப்போம். வாய் அகண்ட பிளாஸ்டிக் டப்-ஐ எடுத்து அதில், போதுமானளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் அதன்பிறகு தேவையான அளவு எலுமிச்சை பழங்கஙளை எடுத்து அவற் றின் சாற்றை பிழிந்து அதில் கலந்துவிடவேண்டும்.

அதன் பிறகு உங்கள் பாதங்கள் முழுவதுமான தண்ணீரில் மூழ்கும் அளவுக்கு உள்ளே வையுங்கள். சுமார் 25 நிமிடங்கள் வரை நன்றாக ஊற விடுங்கள். அதே மாதிரி பிழிந்த எலுமிச்சைகளைக் கொண்டு உங்கள் கால் நகங்களில் நன்றாக தேய்க்க வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்து, கால்களை வெளியே எடுத்து நன்றாக அதிக சூடு இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இதைப்போலவே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் செய்து வந்தால் நாளடைவில் உங்கள் நகங்களில் இருந்த மஞ்சள் கறை முற்றிலுமாக மறைந்து நகங்கள் அழகாகும். நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்.

Source
image
Back to top button